Q ➤ இயேசு மலையிலிருந்து இறங்கினபோது வந்து அவரைப் பணிந்தவன் யார்?
Q ➤ ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது யார்?
Q ➤ எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்று இயேசு யாரைக் குணமாக்கினார்?
Q ➤ யார், கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்த இயேசு குஷ்டரோகியிடம் கூறினார்?
Q ➤ தன் வேலைக்காரன் குணமடைய இயேசுவை வேண்டியவன் யார்?
Q ➤ நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் எவ்வித நோயினால் அவதிப்பட்டான்?
Q ➤ நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தைக்கண்ட இயேசு யாருக்குள் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்றார்?
Q ➤ அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு எங்கே பந்தியிருப்பார்கள்?
Q ➤ புறம்பான இருளிலே தள்ளப்படுபவர்கள் யார்?
Q ➤ இயேசுவின் வார்த்தையால் யாருடைய வேலைக்காரன் குணமடைந்தான்?
Q ➤ யாருடைய மாமி ஜூரமாய் கிடக்கிறதை இயேசு கண்டார்?
Q ➤ இயேசு தொட்டவுடன் ஜூரம் நீங்கி குணமடைந்தாள் யார்?
Q ➤ அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு,நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று கூறிய தீர்க்கன் யார்?
Q ➤ நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; ஆனால் யாருக்கு தலைசாய்க்க இடமில்லை?
Q ➤ தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணவேண்டியவர்கள் யார்?
Q ➤ "ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்"-என்றவர்கள் யார்?
Q ➤ காற்றையும் கடலையும் இயேசு அதட்டியவுடன் ஏற்பட்டது என்ன?
Q ➤ இயேசு, எந்த நாட்டில் வந்தபோது பிசாசு பிடித்த இரண்டு பேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தார்கள்?
Q ➤ காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கு வந்தீரோ? என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ பிசாசுகள் தங்களை எங்கே துரத்தும்படி இயேசுவிடம் வேண்டிக் கொண்டன?
Q ➤ பிசாசு புகுந்த பன்றிகள் எதில் விழுந்து மாண்டுபோயின?
Q ➤ எந்தப் பட்டணத்தார் இயேசுவைத் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள்?