Q ➤ மனுஷர் காணவேண்டுமென்று எதைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ மனுஷர் காணவேண்டுமென்று தர்மம் செய்கிறவர்களுக்கு யாரிடத்தில் பலனில்லை?
Q ➤ தங்கள் பலனை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?
Q ➤ அந்தரங்கமாய் செய்யவேண்டியது எது?
Q ➤ வலதுகை செய்வதை இடதுகை அறியாதிருக்க வேண்டியது எதை?
Q ➤ அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா எப்படி பலனளிப்பார்?
Q ➤ நாம் யாரைப் போல ஜெபம்பண்ணக்கூடாது?
Q ➤ வீதிகளிலும் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறவர்கள் யார்?
Q ➤ நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்?
Q ➤ ஜெபம்பண்ணும்போது யாரைப்போல வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது?
Q ➤ அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைப்பவர்கள் யார்?
Q ➤ நாம் வேண்டிக்கொள்ளும் முன்னமே நமது தேவைகளை அறிந்திருப்பவர் யார்?
Q ➤ பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய....... பரிசுத்தப்படுவதாக?
Q ➤ பரமண்டலத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்பட வேண்டியது எது?
Q ➤ எங்களுக்கு வேண்டிய ....... . இன்று எங்களுக்குத் தாரும்?
Q ➤ நாம் யாருக்கு மன்னிக்கிறது போல நமது கடன்கள் மன்னிக்கப்பட வேண்டும்?
Q ➤ எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல்......... யினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்?
Q ➤ ராஜ்யமும், வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் யாருடையவைகள்?
Q ➤ மனுஷருடைய தப்பிதங்களை நாம் மன்னிக்கும்போது நம்முடைய தப்பிதங்களை நமக்கு மன்னிப்பவர் யார்?
Q ➤ யாருடைய தப்பிதங்களை நாம் மன்னியாதிருக்கும்போது நம்முடைய தப்பிதங்களையும் பிதா மன்னிப்பதில்லை?
Q ➤ நாம் உபவாசிக்கும்போது யாரைப்போல் முகவாடலாய் இருக்கக் கூடாது?
Q ➤ மனுஷர் காணும்பொருட்டாக உபவாசிப்பவர்கள் யார்?
Q ➤ நம்முடைய உபவாசம் யாருக்கு மட்டும் தெரிய வேண்டும்?
Q ➤ எங்கே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கக் கூடாது?
Q ➤ பூமியிலே பூச்சியும் துருவும் எவைகளைக் கெடுக்கும்?
Q ➤ திருடர் கன்னமிட்டுத் திருடுவது எங்கே?
Q ➤ எங்கே நமது பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்க வேண்டும்?
Q ➤ உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள்........ இருக்கும்?
Q ➤ சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
Q ➤ எது தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்?
Q ➤ கண் கெட்டதாயிருந்தால் இருளாக மாறிவிடுவது எது?
Q ➤ எத்தனை எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது ?
Q ➤ தேவனுக்கும் உலகப்பொருளுக்கும்....... செய்ய உங்களால் கூடாது?
Q ➤ என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று எதற்காகக் கவலைப்படக் கூடாது?
Q ➤ என்னத்தை உடுப்போம் என்று எதைக்குறித்துக் கவலைப்படக் கூடாது?
Q ➤ ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
Q ➤ உடையைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
Q ➤ ஆகாயத்துப் பட்சிகளை பிழைப்பூட்டுபவர் யார்?
Q ➤ எவைகளைப் பார்க்கிலும் நாம் விசேஷித்தவர்கள்?
Q ➤ ..........படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
Q ➤ சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் எவைகளைப்போல் உடுத்தியிருந்ததில்லை?
Q ➤ முதலாவது எதைத் தேடவேண்டும்?
Q ➤ தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படுவது எது?
Q ➤ நாளையத் தினத்தைக் குறித்து நாம். ....படக்கூடாது?
Q ➤ அந்தந்த நாளுக்கு அதினதின்......... ...போதும்?