Q ➤ எந்த பண்டிகை நாட்களில் மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்?
Q ➤ பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் எங்கே கூடி இயேசுவை கொலைசெய்ய ஆலோசனை பண்ணினார்கள்?
Q ➤ காய்பா என்பவன் யார்?
Q ➤ ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடி எப்பொழுது இயேசுவை கொலை செய்யக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது?
Q ➤ பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த யார் வீட்டிற்கு இயேசு சென்றார்?
Q ➤ சீமோனின் வீட்டில் இயேசு போஜனபந்தியில் இருக்கும்போது ஒரு ஸ்திரீ எதை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்?
Q ➤ பரிமள தைலத்தை இயேசுவின் மேல் ஊற்றியவுடன், இது வீண் செலவு என்று கூறியவர்கள் யார்?
Q ➤ இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று யாருக்குக் கொடுக்கலாம் என்று சீஷர்கள் கூறினார்கள்?
Q ➤ பரிமள தைலத்தை தன்மேல் ஊற்றியவள், தன்னிடத்தில் எதைச் செய்திருக்கிறாள் என்று இயேசு கூறினார்?
Q ➤ "தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்” – என்றவர் யார்?
Q ➤ பரிமள தைலம் தன்மேல் ஊற்றப்பட்டது எதற்கு அடையாளமானது என்று இயேசு கூறினார்?
Q ➤ இந்த சுவிசேஷம் அறிவிக்கப்படும் இடங்களில் யாருடைய செய்கையும் சொல்லப்படும்?
Q ➤ பிரதான ஆசாரியரிடம் போய் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதாக வாக்குக் கொடுத்தவன் யார்?
Q ➤ பிரதான ஆசாரியர் யூதாஸ்காரியோத்துக்கு எத்தனை வெள்ளிக்காசுகள் கொடுக்க உடன்பட்டார்கள்?
Q ➤ இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கு சமயம் பார்த்துக்கொண்டு இருந்தவன் யார்?
Q ➤ புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை இயேசுவோடு ஆசரிக்க ஆயத்தம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு கூறியவுடன் துக்கமடைந்தவர்கள் யார்?
Q ➤ "ஆண்டவரே நானோ, நானோ?" - இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ என்னோடு கூட. ........ கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்?
Q ➤ தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடி போகிறவர் யார்?
Q ➤ எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு............. .?
Q ➤ தன்னைக் காட்டிக்கொடுக்கிறவன் பிறவாதிருந்தால் அவனுக்கு ....என்று இயேசு கூறினார்?
Q ➤ இயேசுவிடம் ரபீ, நானோ? என்று கேட்டவன் யார்?
Q ➤ இயேசு அப்பத்தை எடுத்து, அதை எதற்கு ஒப்புமைப்படுத்திக் கூறினார்?
Q ➤ அப்பத்தை எடுத்து, பிட்டு, இதை வாங்கிப் புசியுங்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ இயேசு திராட்சரசத்தை எதற்கு ஒப்புமைப்படுத்திக் கூறினார்?
Q ➤ தன்னுடைய இரத்தத்தை இயேசு எப்படி அழைத்தார்?
Q ➤ பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுவது எது?
Q ➤ எதை பானம் பண்ணுவதில்லை என்று இயேசு கூறினார்?
Q ➤ திராட்சப்பழரசத்தை நவமானதாய் சீஷர்களுடன் இயேசு எங்கே பானம் பண்ணுவார்?
Q ➤ புளிப்பில்லா அப்பப்பண்டிகை முடிவில் சீஷர்கள் எதைப் பாடினார்கள்?
Q ➤ ஸ்தோத்திரப்பாட்டை பாடினபின்பு இயேசுவோடு சீஷர்கள் எங்கே போனார்கள்?
Q ➤ நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறல் அடைவீர்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ .... வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளதாக இயேசு கூறினார்?
Q ➤ உயிர்தெழுந்தபின்பு இயேசு எங்கே போவதாகக் கூறினார்?
Q ➤ நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ சேவல் கூவுகிறதற்கு முன்னே இயேசுவை மறுதலிப்பவன் யார்?
Q ➤ சேவல் கூவுமுன் எத்தனை முறை மறுதலிப்பாய் என்று இயேசு பேதுருவிடம் கூறினார்?
Q ➤ உம்மோடு மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன் என்றவன் யார்?
Q ➤ இயேசு சீஷர்களை எவ்விடத்திற்கு அழைத்துச் சென்றார்?
Q ➤ கெத்செமனே என்ற இடத்திற்கு இயேசு ஏன் சென்றார்?
Q ➤ துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கியவர் யார்?
Q ➤ இயேசுவின் ஆத்துமா எதற்கேதுவான துக்கம் கொண்டிருந்தது?
Q ➤ "இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்" - ஜெபித்தவர் யார்?
Q ➤ உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு யாரிடம் ஜெபித்தார்?
Q ➤ இயேசு ஜெபம்பண்ணும்போது சீஷர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
Q ➤ “ஒரு மணி நேரமாவது விழித்திருக்கக்கூடாதா?" - இயேசு யாரிடம் கேட்டார்?
Q ➤ எதற்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும்?
Q ➤ எது உற்சாகமுள்ளது என்று இயேசு கூறினார்?
Q ➤ பலவீனமுள்ளது எது என்று இயேசு கூறினார்?
Q ➤ யாருடைய கண்கள் நித்திரை மயக்கத்தினால் நிறைந்திருந்தது?
Q ➤ எத்தனைமுறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்செமனேயில் ஜெபம்பண்ணினார்?
Q ➤ மனுஷகுமாரன் யாருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படும் வேளைவந்தது என்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ பிரதான ஆசாரியர் மற்றும் மூப்பர்கள் பட்டயங்களோடும் தடிகளோடும் யாரைப் பிடிக்க வந்தார்கள்?
Q ➤ இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் கூறிய அடையாளம் என்ன?
Q ➤ ரபீ, வாழ்க என்று இயேசுவை முத்தம் செய்தவன் யார்?
Q ➤ தன்னைக் காட்டிக் கொடுத்தவனை இயேசு எப்படி அழைத்தார்?
Q ➤ இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன் யாருடைய வேலைக்காரனை காதற வெட்டி னான்?
Q ➤ பட்டயத்தை எடுக்கிற யாவரும் எதனால் மடிந்துபோவார்கள்?
Q ➤ "என் பிதாவை வேண்டிக்கொண்டால் எத்தனை லேகியோனுக்கு அதிகமானத் தூதரை என்னிடத்தில் அனுப்புவார்” - என்று இயேசு கூறினார்?
Q ➤ வேத வாக்கியங்கள் நிறைவேறத் தன்னை அர்ப்பணித்தவர் யார்?
Q ➤ கள்ளனைப் பிடிக்கப் புறப்படுவதுப்போல யாரைப்பிடிக்க ஜனங்கள் பட்டயங்களோடு வந்தார்கள்?
Q ➤ ஜனங்கள் இயேசுவைப் பிடிக்கும்போது இயேசுவை விட்டு ஓடிப்போனவர்கள் யார்?
Q ➤ இயேசுவைப் பிடித்தவர்கள் அவரை யாரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள்?
Q ➤ தூரத்திலே இயேசுவுக்குப்பின் தொடர்ந்து சென்றவன் யார்?
Q ➤ பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தாரும் யாருக்கு விரோதமாய் பொய்ச்சாட்சித் தேடினார்கள்?
Q ➤ அநேகர் வந்து .......... சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை?
Q ➤ எத்தனை பொய்ச்சாட்சிகள், இயேசு தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள் கட்டுவார் என்று கூறியதாகக் கூறினார்கள்?
Q ➤ "நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா?" - இயேசுவிடம் கேட்டவன் யார்?
Q ➤ சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் யார் என்று இயேசு கூறினார்?
Q ➤ வானத்தின் மேகங்கள் மேல் மனுஷகுமாரன் வருவதை இதுமுதல் காண்பீர்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவன் யார்?
Q ➤ இயேசு எதைச் சொன்னதாகப் பிரதான ஆசாரியன் கூறினான்?
Q ➤ இயேசுவை அடித்து, அடித்தவன் யார் என்பதை எதின் மூலம் சொல்லும் படியாகக் கூறினார்கள்?
Q ➤ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய் என பேதுரு யாரால் குற்றம் சாட்டப்பட்டான்?
Q ➤ இயேசுவை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கியவன் யார்?
Q ➤ பேதுரு இயேசுவை மறுதலித்தவுடன் கூவியது எது?
Q ➤ இயேசுவின் வார்த்தைகளை நினைத்து மனங்கசந்து அழுதவன் யார்?