Tamil Bible Quiz Matthew Chapter 27

Q ➤ பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவரைக் கட்டி யாரிடம் ஒப்படைத்தார்கள்?


Q ➤ இயேசு மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு. மனஸ்தாபப்பட்டவன் யார்?


Q ➤ பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் முப்பது வெள்ளிக்காசை திரும்பக் கொண்டுவந்தவன் யார்?


Q ➤ யூதாஸ்காரியோத்து தான் எதைச் செய்துவிட்டதாகக் கூறினான்?


Q ➤ குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்று கூறியது யார்?


Q ➤ முப்பது வெள்ளிக்காசை யூதாஸ்காரியோத்து எறிந்துபோட்டது எங்கே?


Q ➤ நான்றுகொண்டு செத்தவன் யார்?


Q ➤ யூதாஸ் எறிந்துவிட்ட காசை எதில் போடக்கூடாது என்று பிரதான ஆசாரியர் கூறினர்?


Q ➤ அந்நியரை அடக்கம் பண்ண நிலம் வாங்க உதவியது எது?


Q ➤ யூதாசின் காசினால் யாருடைய நிலம் வாங்கப்பட்டது ?


Q ➤ யூதாசின் காசினால் வாங்கப்பட்ட நிலம் எப்படி அழைக்கப்படுகின்றது?


Q ➤ குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?


Q ➤ நீ யூதருயை ராஜாவா என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?


Q ➤ பிலாத்துவின் முன் நிற்கையில், பிரதான ஆசாரியருக்கும் மூப்பருக்கும் மாறுத்தரம் கூறாதவர் யார்?


Q ➤ பிரதான ஆசாரியருக்கும் மூப்பருக்கும் இயேசு பதில் கூறாததைக்கண்டு ஆச்சரியப்பட்டவன் யார்?


Q ➤ ஜனங்களின் வேண்டுகோளின்பேரில் காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனை விடுதலை செய்வது யாருடைய வழக்கமாயிருந்தது?


Q ➤ காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனை தேசாதிபதி எப்பொழுது விடுதலை செய்வான்?


Q ➤ காவல்பண்ணப்பட்டவர்களில் பேர் போனவனாயிருந்தவன் யார்?


Q ➤ பிரதான ஆசாரியர் இயேசுவை எதினாலே ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்துகொண்டான்?


Q ➤ நான் உங்களுக்கு எவனை விடுதலையாக்க வேண்டும் என்று பிரதான ஆசாரியரிடம் கேட்டது யார்?


Q ➤ பிலாத்து நியாயசனத்தில் உட்கார்ந்திருக்கையில் அவனிடத்தில் ஆள் அனுப்பியவள் யார்?


Q ➤ இயேசுவினிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடுபட்டவள் யார்?


Q ➤ பிலாத்துவின் மனைவி இயேசுவை யாரென்று கூறினாள்?


Q ➤ இயேசுவை கொலை செய்விக்க பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை ஏவிவிட்டார்கள்?


Q ➤ பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ள பிலாத்துவிடம் ஜனங்களை ஏவி விட்டார்கள்?


Q ➤ பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களும் இயேசுவை என்ன செய்ய வேண்டுமென்று பிலாத்துவிடம் கூறினார்கள்?


Q ➤ தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று கண்டவன் யார்?


Q ➤ ஜனங்களுக்கு முன்பாகத் தண்ணீரை அள்ளி, கைகளைக் கழுவிக்கொண்டவன் யார்?


Q ➤ பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாகக் கூறினான்?


Q ➤ "இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்” கூறியவன் யார்?


Q ➤ "இயேசுவின் இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக"-கூறியவர்கள் யார்?


Q ➤ பிலாத்து இயேசுவை யாரிடம் ஒப்படைத்தான்?


Q ➤ பண்டிகைநாளில் விடுதலையாக்கப்பட்டவன் யார்?


Q ➤ பிலாத்து இயேசுவை எதினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்?


Q ➤ இயேசுவை தேசாதிபதியின் அரமனையில் கொண்டுபோய், போர்ச்சேவகர் கூட்டம் முழுவதையும் கூடிவரச் செய்தவர்கள் யார்?


Q ➤ இயேசுவின் மேலங்கி கழற்றப்பட்டு, அதற்குப் பதிலாக உடுத்தப்பட்டது எது?


Q ➤ இயேசுவின் சிரசின்மேல் வைக்கப்பட்டது எது?


Q ➤ இயேசுவின் வலதுகையில் கொடுக்கப்பட்டது எது?


Q ➤ இயேசுவை என்ன சொல்லி பரியாசம் பண்ணினார்கள்?


Q ➤ இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி பலவந்தம் பண்ணப்பட்டவன் யார்?


Q ➤ கொல்கொதா என்பதன் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ இயேசுவுக்கு குடிக்கக் கொடுக்கப்பட்டது எது?


Q ➤ கசப்புக்கலந்த காடியை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தவர் யார்?


Q ➤ இயேசுவின் வஸ்திரங்கள் எவ்வாறு பங்கிடப்பட்டது?


Q ➤ இயேசுவின் வஸ்திரங்களைப் பங்கிட்டு, சீட்டுப் போட்டவர்கள் யார்?


Q ➤ என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று யாரினால் கூறப்பட்டது நிறைவேறியது?


Q ➤ இயேசுவின் சிரசுக்கு மேலாக எழுதி வைக்கப்பட்ட வாசகம் என்ன?


Q ➤ கள்ளர்கள்நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை என்று கூறியவர்கள் யார்?


Q ➤ ஆறாம் மணிமுதல் ஒன்பதாம் மணிவரை பூமியெங்கும் உண்டானது எது?


Q ➤ ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எப்படி சத்தமிட்டுக் கூப்பிட்டார்?


Q ➤ இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டபோது எதன் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது?


Q ➤ இயேசு தமது ஆவியை விட்டபோது கல்லறைத் திறந்து யாருடைய சரீரங்கள் எழுந்திருந்தன?


Q ➤ சம்பவித்தக் காரியங்களைக்கண்டு மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று கூறியவன் யார்?


Q ➤ கலிலேயாவிலிருந்து இயேசுவுக்கு ஊழியம் செய்ய வந்திருந்த ஸ்திரீகள், தூரத்திலிருந்து எதைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்?


Q ➤ இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடமிருந்து கேட்டு பெற்றுக்கொண்டவன் யார்?


Q ➤ இயேசுவின் சரீரத்தை, தான் கன்மலையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தவன் யார்?


Q ➤ மூன்றுநாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி பிலாத்துவிடம் வேண்டிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ பிரதான ஆசாரியர், பரிசேயரிடம் கூறியவன் யார்?


Q ➤ கல்லறைக்கு முத்திரைப்போட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தியவர்கள் யார்?