Tamil Bible Quiz Mark Chapter 9

Q ➤ 453. இங்கே நிற்கிறவர்களில் சிலர் எது வருவதைக் காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று இயேசு சொன்னார்?


Q ➤ 454. ஆறுநாளைக்குப்பின்பு இயேசு எவர்களைத் தனியே கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போனார்?


Q ➤ 455. இயேசு எவர்களுக்கு முன்பாக மலையின்மேல் மறுரூபமானார்?


Q ➤ 456. இயேசுவின் வஸ்திரம் எப்படி பிரகாசித்தது?


Q ➤ 457. இயேசுவின் வஸ்திரம் எதைப்போல வெண்மையாயிருந்தது?


Q ➤ 458. பூமியிலே எந்த வண்ணானாலும் வெளுக்கக் கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது எது?


Q ➤ 459. இயேசு மறுரூபமானபோது இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்?


Q ➤ 460. “ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 461. எத்தனை கூடாரங்களைப் போடுவோம் என்று பேதுரு கூறினான்?


Q ➤ 462. மூன்று பேர்களுக்குக் கூடாரம் போடுவோம் என்று பேதுருவால் கூறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 463. பேதுரு ஏன் கூடாரங்களைப் போடுவோம் என்று கூறினான்?


Q ➤ 464. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மேல் நிழலிட்டது எது?


Q ➤ 465. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்"- சத்தம் உண்டான இடம் எது?


Q ➤ 466. சீஷர்கள் மூன்றுபேரும் சுற்றிலும் பார்த்தபோது யாரைத் தவிர ஒருவரையும் காணவில்லை?


Q ➤ 467. இயேசு மூன்று சீஷரையும் நோக்கி அவர்கள் கண்டவைகளை எதுவரை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்றார்?


Q ➤ 468. எலியா முந்தி வரவேண்டுமென்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 469. யார், முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 470. பலபாடுகள் பட்டு அவமதிக்கப்படுவார் என்று யாரைக் குறித்து எழுதியிருக்கிறது?


Q ➤ 471. யாரைக் குறித்து எழுதியிருக்கிறபிரகாரம் அவனுக்குச் செய்தார்கள்?


Q ➤ 472. இயேசுவின் சீஷரோடு தர்க்கித்துக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 473. எப்படிப்பட்ட மகனைக் கொண்டுவந்தேன் என்று கூட்டத்தில் இருந்தவன் இயேசுவிடம் கூறினான்?


Q ➤ 474. ஊமையான ஆவி பிடிக்கும்போது அது அவனை என்ன செய்யும்?


Q ➤ 475. ஊமையான ஆவி அவனைப் பிடிக்கும்போது அவன் செய்வது என்ன?


Q ➤ 476. ஊமையான ஆவியை துரத்தக் கூடாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 477. "விசுவாசமில்லாத சந்ததியே, எது வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்" - கேட்டவர் யார்?


Q ➤ 478. ஊமையான ஆவி அவனுக்கு எவ்வளவு காலமாக இருந்தது?


Q ➤ 479. ஊமையான ஆவி அவனைக் கொல்லும்படி அநேகந்தரம் அவனை எவைகளில் தள்ளினது?


Q ➤ 480. எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 481. யாருக்கு, எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 482. பிள்ளையின் தகப்பன் எது நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்?


Q ➤ 483. இயேசு அதட்டியவுடன் புறப்பட்டு போனது எது?


Q ➤ 485. ஊமையும் செவிடுமான ஆவி அவனை விட்டு புறப்பட்டுப் போனபோது


Q ➤ 486. இயேசு கையைப் பிடித்துத் தூக்கியவுடன் எழுந்திருந்தவன் யார்?


Q ➤ 487. இவ்வகைப் பிசாசு எவைகளினாலன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்று இயேசு கூறினார்?


Q ➤ 488. சீஷர்கள் எதைக்குறித்து இயேசுவிடம் கேட்கப் பயந்தார்கள்?


Q ➤ 489. இயேசு போதகம்பண்ணி சொன்ன எந்த வார்த்தையை சீஷர்கள் அறியவில்லை?


Q ➤ 490. சீஷர்கள் வழியிலே எதைக் குறித்து தர்க்கம் பண்ணினார்கள்?


Q ➤ 491. எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 492. இயேசு யாரை எடுத்து, சீஷர்கள் நடுவிலே நிறுத்தினார்?


Q ➤ 493. சிறுபிள்ளைகளில் ஒன்றை இயேசுவின் நாமத்தினால் ஏற்றுக்கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக் கொள்ளுகிறான்?


Q ➤ 494. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான்?


Q ➤ 495. இயேசுவைப் பின்பற்றாமல் பிசாசுகளைத் துரத்தினவனைத் தடுத்தவர்கள் யார்?


Q ➤ 496 இயேசுவின் நாமத்தினால் அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் இயேசுவைக் குறித்து என்ன சொல்லமாட்டான்?


Q ➤ 497. நமக்கு விரோதியாயிராதவன் நமக்கு .....?


Q ➤ 498, கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் எதைக் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போவதில்லையென்று இயேசு கூறினார்?


Q ➤ 499. யாருக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை?


Q ➤ 500. யாரை கழுத்தில் எந்திரக்கல் கட்டி அவனை சமுத்திரத்தில் தள்ளுவது அவனுக்கு நலமாயிருக்கும்?


Q ➤ 501. கை இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 502. இரண்டு கை உடையவனாய் நரகத்தில் போவதைப் பார்க்கிலும் எது நலமாயிருக்கும்?


Q ➤ 503. நரகத்தில் சாவாமலிருப்பது எது?


Q ➤ 504. நரகத்தில் அவியாமலிருப்பது எது?


Q ➤ 505. கால் இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 506. சப்பாணியாய் எதற்குள் பிரவேசிப்பது நலமாயிருக்கும்?


Q ➤ 507. கண் இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 508. ஒற்றைக் கண்ணனாய் எங்கே பிரவேசிப்பது நலமாயிருக்கும்?


Q ➤ 509. எந்த பலியும் எதினால் உப்பிடப்படும்?


Q ➤ 510. எந்த மனுஷனும் எதினால் உப்பிடப்படுவான்?


Q ➤ 511. ........ சாரமற்றுபோனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்?


Q ➤ 512. உங்களுக்குள்ளே உப்பு .... உடையவர்களாயிருங்கள்?


Q ➤ 513. ஒருவரோடொருவர் எது உள்ளவர்களாயிருக்க வேண்டும்?