Tamil Bible Quiz Mark Chapter 5

Q ➤ 224. கடலுக்கு அக்கரையிலுள்ள நாடு யாருடையது?


Q ➤ 225. கதரேனருடைய நாட்டில் இயேசுவுக்கு எதிராக வந்தவன் யார்?


Q ➤ 226. அசுத்த ஆவியுள்ள மனுஷன் எங்கிருந்து வந்தான்?


Q ➤ 227. அசுத்த ஆவியுள்ள மனுஷனின் குடியிருப்பு எங்கே இருந்தது?


Q ➤ 228. அசுத்த ஆவியுள்ள மனுஷனை எவைகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது?


Q ➤ 229. அசுத்த ஆவியுள்ள மனுஷன் அநேகந்தரம் எவைகளினால் கட்டப்பட்டும் அவைகளை முறித்தும் தகர்த்தும் போடுவான்?


Q ➤ 230. யாரை அடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது?


Q ➤ 231. இரவும் பகலும் மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 232. அசுத்த ஆவியுள்ள மனுஷன் எவைகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான்?


Q ➤ 233. அசுத்த ஆவியுள்ள மனுஷன் யாரை தூரத்திலேக் கண்டு, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டான்?


Q ➤ 234. "இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன?" - என்றவன் யார்?


Q ➤ 235. அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவிடம், தன்னை வேதனைப் படுத்தாதபடிக்கு யார் பேரில் ஆணையிடுவதாகக் கூறினான்?


Q ➤ 236. அசுத்த ஆவியே இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று கூறியவர் யார்?


Q ➤ 237. அசுத்த ஆவியுள்ள மனுஷன் தன் பேர் என்னவென்று சொன்னான்?


Q ➤ 238. "நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன்" -கூறியவன் யார்?


Q ➤ 239. அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவிடம் மிகவும் வேண்டிக் கொண்டது என்ன?


Q ➤ 240. மலையருகே கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது எது?


Q ➤ 241. பிசாசுகள் இயேசுவிடம் தங்களை எங்கே அனுப்பும்படி வேண்டிக் கொண்டன?


Q ➤ 242. மலையருகே மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 243. இயேசு உத்தரவு கொடுத்தவுடன் புறப்பட்டு, பன்றிகளுக்குள் போனவை எவை?


Q ➤ 244. உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மாண்டவை எவை?


Q ➤ 245. பன்றிகள் ஏன் கடலில் அமிழ்ந்து மாண்டன?


Q ➤ 246. பன்றிகளுக்கு சம்பவித்ததை பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 247. வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்து இயேசுவிடம் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 248. தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி இயேசுவை வேண்டிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 249. இயேசுவோடே கூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டவன் யார்?


Q ➤ 250. யார் வேண்டிக்கொண்டதற்கு இயேசு உத்தரவு கொடுக்கவில்லை?


Q ➤ 251. நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போ என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 252. கர்த்தர் தனக்கு செய்தவைகளையெல்லாம் அறிவிக்க இயேசுவால் உத்தரவு பெற்றவன் யார்?


Q ➤ 253. பிசாசுகள் பிடித்திருந்து, தெளிந்தவன் தனக்கு இயேசு செய்தவைகளை எந்த நாட்டில் பிரசித்தம் பண்ணினான்?


Q ➤ 254. இயேசுவைக் கண்டவுடன் அவர் பாதத்தில் விழுந்தவன் யார்?


Q ➤ 255. யவீரு என்பவன் யார்?


Q ➤ 256. தன் குமாரத்தி மரண அவஸ்தைப்படுவதாகக் கூறியவன் யார்?


Q ➤ 257. தன் மகள் ஆரோக்கியமடையும்படி யவீரு யாரை மிகவும் வேண்டிக் கொண்டான்?


Q ➤ 258. இயேசு தன் மகள்மேல் கைகளை வைத்தால், அவள் பிழைப்பாள் என்றவன் யார்?


Q ➤ 259. இயேசுவுக்குப் பின்சென்று அவரை நெருக்கியவர்கள் யார்?


Q ➤ 260. அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டவள் யார்?


Q ➤ 261. பெரும்பாடுள்ள ஸ்திரீ எத்தனை வருஷங்களாக வியாதிப்பட்டிருந்தாள்?


Q ➤ 262. தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும் சற்றாகிலும் குணமடையாதவள் யார்?


Q ➤ 263. பெரும்பாடுள்ள ஸ்திரீ யாரைக் குறித்து கேள்விப்பட்டாள்?


Q ➤ 264. இயேசுவின் வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி இயேசுவைப் பின்தொடர்ந்தவள் யார்?


Q ➤ 265. ஜனக்கூட்டத்துக்குள்ளே இயேசுவுக்குப் பின்னாக வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டவள் யார்?


Q ➤ 266. இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டவுடன் யாருடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று?


Q ➤ 267. இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டவுடன் பெரும்பாடுள்ள ஸ்திரீ எதைத் தன் சரீரத்தில் உணர்ந்தாள்?


Q ➤ 268. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டவுடன் இயேசுவிடமிருந்து புறப்பட்டது என்ன?


Q ➤ 269. "என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 270. திரளான ஜனங்கள் உம்மைநெருக்கிக் கொண்டிருக்க என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 271. தன்னிடத்தில் சம்பவித்ததை அறிந்து பயந்து நடுங்கியவள் யார்?


Q ➤ 272. இயேசுவுக்கு முன்பாக விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னவள் யார்?


Q ➤ 273. பெரும்பாடுள்ள ஸ்திரீயை இரட்சித்தது எது என்று இயேசு கூறினார்?


Q ➤ 274, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 275. உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 276. ஜெபஆலயத்தலைவனின் குமாரத்தி மரித்துப்போனதை அறிந்து, இயேசு அவனிடம் கூறியது என்ன?


Q ➤ 277. இயேசு யவீருவின் வீட்டிற்கு வரும்போது யார், யாரைத் தவிர வேறொருவரையும் தம்மோடே வருவதற்கு இடங்கொடுக்கவில்லை?


Q ➤ 278. சந்தடியையும் அழுது புலம்புகிறவர்களையும் இயேசு எங்கே கண்டார்?


Q ➤ 279. 'பிள்ளை மரிக்கவில்லை. நித்திரையாயிருக்கிறாள்' - கூறியவர் யார்?


Q ➤ 280. இயேசுவைப் பார்த்து நகைத்தவர்கள் யார்?


Q ➤ 281. பிள்ளையின் கையைப்பிடித்து இயேசு சொன்னது என்ன?


Q ➤ 282. தலீத்தாகூமி என்பதற்கு அர்த்தம் என்ன?


Q ➤ 283. இயேசு தலீத்தாகூமி என்றவுடன் நடந்தது என்ன?


Q ➤ 284. யவீருவின் குமாரத்தியின் வயது என்ன?