Tamil Bible Quiz Luke Chapter 22

Q ➤ 812. என்ன பண்டிகையின்போது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவைக் கொலைசெய்ய யோசித்தார்கள்?


Q ➤ 813. சாத்தான் யாருக்குள்ளே புகுந்தான்?


Q ➤ 814. யூதாஸ் எதைக்குறித்து ஆலோசனை பண்ணினான்?


Q ➤ 815. யூதாசுக்கு என்ன கொடுக்க உடன்பட்டார்கள்?


Q ➤ 816. பஸ்காவைப் பலியிடவேண்டிய.......நாள் வந்தது?


Q ➤ 817. இயேசு பஸ்காவைப் புசிக்க யாரிடம் இடம் ஆயத்தம் பண்ணச் சொன்னார்?


Q ➤ 818. நகரத்தில் பிரவேசிக்கும்போது எதை சுமந்து வருகிறவன் சீஷருக்கு எதிர்ப்படுவான்?


Q ➤ 819. தண்ணீர்குடம் சுமந்துவருகிறவன் போகிற வீட்டிற்கு எதற்கு இடம் கேட்க வேண்டும்?


Q ➤ 820. எவைகள் விரித்திருக்கிற பெரிய அறையை வீட்டெஜமான் காண்பிப்பான்?


Q ➤ 821. இயேசு பாடுபடுமுன்னே சீஷருடன் எதைப்புசிக்க ஆயத்தமாயிருந்தார்?


Q ➤ 822. எது நிறைவேறுமளவும் இயேசு இனி பஸ்காவைப் புசிக்கமாட்டார்?


Q ➤ 823. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் இயேசு எதைப்பானம் பண்ணமாட்டார்?


Q ➤ 824. இயேசு அப்பத்தைப்பிட்டு, சீஷரிடம் கொடுத்து கூறியது என்ன? இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற


Q ➤ 825. இந்தப்பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற...........புதிய உடன்படிக்கையாயிருக்கிறது?


Q ➤ 826. யாருடைய கை இயேசுவோடேகூடப் பந்தியிலிருந்தது?


Q ➤ 827. தீர்மானிக்கப்பட்டபடி போகிறவர் யார்?


Q ➤ 828. சீஷருக்குள் எதைப்பற்றின வாக்குவாதம் உண்டானது?


Q ➤ 829. பெரியவன் எப்படி இருக்க வேண்டும்?


Q ➤ 830. தலைவன் எப்படி இருக்க வேண்டும்?


Q ➤ 831. பந்தியிருக்கிறவன், பணிவிடைக்காரன்' - இவர்களில் பெரியவன் யார்?


Q ➤ 832. இயேசு சீஷர்களின் நடுவில் யாரைப்போல இருந்தார்?


Q ➤ 833. இயேசு சீஷர்களுக்கு எதை ஏற்படுத்துவார்?


Q ➤ 834. சீஷர்கள் இயேசுவோடு யாரை நியாயந்தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின்மேல் உட்காருவார்கள்?


Q ➤ 835. கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல சீஷர்களைப் புடைக்க உத்தரவு கேட்டவன் யார்?


Q ➤ 836. பேதுருவின்......ஒழிந்துபோகாதபடி இயேசு வேண்டிக்கொண்டார்?


Q ➤ 837. பேதுரு குணப்பட்டபின்பு யாரை ஸ்திரப்படுத்த வேண்டும்?


Q ➤ 838. சாவிலும் இயேசுவைப் பின்பற்ற ஆயத்தமாயிருந்தவன் யார்?


Q ➤ 839. சேவல் கூவுகிறதற்குமுன்னே மூன்றுதரம் இயேசுவை மறுதலிப்பவன் யார் என்று இயேசு கூறினார்?


Q ➤ 840. பணப்பை, சாமான்பை, பாதரட்சைகள் இல்லாமல் அனுப்பப்பட்டபோது குறைவில்லாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 841. எவைகளை உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 842. பட்டயம் இல்லாத சீஷன் எதை விற்று, பட்டயம் கொள்ள இயேசு கூறினார்?


Q ➤ 843, யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வாக்கியம் நிறைவேற வேண்டும்?


Q ➤ 844. சீஷர்களிடம் எத்தனை பட்டயங்கள் இருந்தன?


Q ➤ 845. எதற்குட்படாதபடி விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்?


Q ➤ 846. பிதாவுக்குச் சித்தமானால், எது நீங்கும்படி இயேசு ஜெபித்தார்?


Q ➤ 847, வானத்திலிருந்து தோன்றி இயேசுவை பலப்படுத்தியவர் யார்?


Q ➤ 848. மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணியவர் யார்?


Q ➤ 849. இயேசுவின் வேர்வை எவைகளாய் தரையில் விழுந்தது?


Q ➤ 850. துக்கத்தினால் நித்திரைப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 851. இயேசுவைப் பிடிக்க வந்தவர்களுடன் வந்தவன் யார்?


Q ➤ 852. "யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்" - கேட்டவர் யார்?


Q ➤ 853. இயேசுவோடு நின்றவன் யாருடைய வலதுகாதற வெட்டினான்?


Q ➤ 854. வேலைக்காரனின் காதை சொஸ்தப்படுத்தினவர் யார்?


Q ➤ 855. யாரைப்பிடிக்க வருகிறதுபோல இயேசுவைப் பிடிக்க வந்தார்கள்?


Q ➤ 856. இது எதன் அதிகாரமாயிருக்கிறதென்று இயேசு கூறினார்?


Q ➤ 857. இயேசுவைப் பிடித்து எங்கே கொண்டு விட்டார்கள்?


Q ➤ 858. தூரத்தில் இயேசுவுக்குப் பின்சென்றவன் யார்?


Q ➤ 859. வேலைக்காரியிடம் இயேசுவை மறுதலித்தவன் யார்?


Q ➤ 860. சேவல் கூவினவுடன் பேதுருவை திரும்பிப் பார்த்தவர் யார்?


Q ➤ 861. கர்த்தர் சொன்ன வார்த்தையை நினைவுகூர்ந்து மனங்கசந்து அழுதவன் யார்?


Q ➤ 862. யாருடைய கண்களைக் கட்டி முகத்தில் அறைந்தார்கள்?


Q ➤ 863. இயேசுவை முகத்திலறைந்து அதை எதினால் சொல்லக் கேட்டார்கள்?


Q ➤ 864. விடியற்காலத்தில் இயேசுவை எங்கே நிறுத்தினார்கள்?


Q ➤ 865. இயேசு தன்னை யார் என்று சொன்னாலும் நம்பமாட்டார்கள்?


Q ➤ 866. இதுமுதல் மனுஷகுமாரன் யாருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பார்கள்?


Q ➤ 867. “நீ தேவனுடைய குமாரனா?" - யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 868. ஆலோசனைச் சங்கத்தார் தங்களுக்கு இனி எது வேண்டியதில்லை என்று சொன்னார்கள்?