Tamil Bible Quiz Luke Chapter 10

Q ➤ 396. தாம் போகும் இடங்களுக்கு, இரண்டிரண்டுபேரை தமக்குமுன் அனுப்பும்படி இயேசு எத்தனை பேரை நியமித்தார்?


Q ➤ 397. ................ மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்?


Q ➤ 398.ஆட்டுக்குட்டிகளை.....அனுப்புகிறதுபோல இயேசு சீஷர்களைஅ னுப்பினார்?


Q ➤ 399. ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது முதலாவது எது உண்டாவதாக என்று சொல்ல வேண்டும்?


Q ➤ 400. வீட்டில் யார் இல்லாவிட்டால் சமாதானம் திரும்பிவரும்?


Q ➤ 401. வேலையாள் எதற்குப் பாத்திரனாயிருக்கிறான்?


Q ➤ 402. சீஷர்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும், எந்த நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்?


Q ➤ 403. எங்கே செய்யப்பட்டவைகளை தீரு, சீதோனில் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்திருப்பார்கள்?


Q ➤ 404. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட எது பாதாள பரியந்தம் தாழ்த்தப்படும்?


Q ➤ 405. சீஷருக்குச் செவிகொடுக்கிறவன் யாருக்குச் செவி கொடுக்கிறான்?


Q ➤ 406. இயேசுவை அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டைப் பண்ணுகிறான்?


Q ➤ 407. சாத்தான் எதைப்போல வானத்திலிருந்து விழுகிறதை இயேசு கண்டார்?


Q ➤ 408. எவைகள் கீழ்ப்படிகிறதற்காக சந்தோஷப்படவேண்டாம் என்று இயேசு கூறினார்?


Q ➤ 409. நாமங்கள் எங்கே எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்பட வேண்டும்?


Q ➤ 410. சகலமும் பிதாவினால் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 411. குமாரனை அறிந்திருக்கிற ஒருவர் யார்?


Q ➤ 412. இயேசு சீஷர்களை நோக்கி, நீங்கள் காண்கிறவைகளைக் காணும்..... பாக்கியமுள்ளது என்றார்?


Q ➤ 413. இயேசுவை சோதிக்கும்படி நியாயசாஸ்திரி கேட்ட கேள்வி எதைப் பற்றியது?


Q ➤ 414. நிதானமாய் உத்தரவு சொன்னவன் யார்?


Q ➤ 415. தன்னை நீதிமானாய் காண்பிக்க விரும்பி, இயேசுவிடம் எனக்குப் பிறன் யார் என்று கேட்டவன் யார்?


Q ➤ 416, எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போனவனை குற்றுயிராக விட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 417. குற்றுயிராக இருந்தவனைக் கண்டு விலகிப்போனவர்கள் யார்?


Q ➤ 418. குற்றுயிராக இருந்தவனை சத்திரத்துக்குக் கொண்டு போய் பராமரித்தவன் யார்?


Q ➤ 419. காயம்பட்டவனைப் பராமரிக்கப் பணம் கொடுத்தவன் யார்?


Q ➤ 420. காயம்பட்டவனுக்குப் பிறன் யார்?


Q ➤ 421. இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, வசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தவள் யார்?


Q ➤ 422. பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்தவள் யார்?


Q ➤ 423. "தேவையானது ஒன்றே"- கூறியவர் யார்?


Q ➤ 424. மரியாள் எதைத் தெரிந்துகொண்டாள்?