Q ➤ 126. யார், ஞானஸ்நானம் கொடுக்கவில்லை?
Q ➤ 127. இயேசு எந்த நாட்டின் வழியே கலிலேயாவுக்குப் போனார்?
Q ➤ 128. சீகார் என்பது எவ்விடத்திலுள்ள ஊர்?
Q ➤ 129. யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகே இருந்த ஊர் எது?
Q ➤ 130. சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது?
Q ➤ 131. யாக்கோபுடைய கிணற்றினருகே இளைப்பாற உட்கார்ந்தவர் யார்?
Q ➤ 132. இயேசு யாக்கோபின் கிணற்றினருகே உட்கார்ந்த நேரம் என்ன?
Q ➤ 133. சீஷர்கள் போஜனம் கொள்ளும்படி எங்கே சென்றனர்?
Q ➤ 134. தண்ணீர் மொள்ளவந்த ஸ்திரீயார்?
Q ➤ 135. "தாகத்துக்குத்தா" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 136. யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்?
Q ➤ 137. "ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 138. யாக்கோபின் பிள்ளைகளும் மிருகஜீவன்களும் எங்கிருந்த கிணற்று நீரைப் பருகினர்?
Q ➤ 139. இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் என்ன உண்டாகும்?
Q ➤ 140. யார் தரும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருபோதும் தாகம் ஏற்படாது?
Q ➤ 141. நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற ஊற்றாயிருப்பது எது?
Q ➤ 142. "நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 143. எனக்குப் புருஷன் இல்லை எனக் கூறியவள் யார்?
Q ➤ 144. நீ சொன்னது சரிதான் என்று சமாரியா ஸ்திரீயிடம் கூறியவர் யார்?
Q ➤ 145. சமாரியா ஸ்திரீக்கு எத்தனை புருஷர் இருந்ததாக இயேசு கூறினார்?
Q ➤ 146. சமாரியா ஸ்திரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்?
Q ➤ 147. இரண்டாவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்?
Q ➤ 148. யாரை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது?
Q ➤ 149. இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது?
Q ➤ 150. ஆவியாய் இருக்கிறவர் யார்?
Q ➤ 151. பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும்?
Q ➤ 152. சமாரியா ஸ்திரீ இயேசுவை மூன்றாவதாக யாராகக் கண்டாள்?
Q ➤ 153, "உன்னுடனே பேசுகிற நானே அவர்" - இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 154. இயேசு யாருடன் பேசிக் கொண்டிருந்தபோது சீஷர்கள் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை?
Q ➤ 155. சமாரியா ஸ்திரீ குடத்தை வைத்துவிட்டு எங்கே போனாள்?
Q ➤ 156. "அவரை வந்து பாருங்கள்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 157. நான்காவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்?
Q ➤ 158, “ரபீ, போஜனம்பண்ணும்"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 159. என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய முடிப்பதே என்னுடைய போஜனமாய் இருக்கிறது?
Q ➤ 160. அறுப்புக்கு விளைந்திருக்கிறது எது?
Q ➤ 161. வயல்நிலங்கள் விளைந்திருக்கிறதென்று உங்கள் ....... பாருங்கள்?
Q ➤ 162. அறுக்கிறவன் எதை வாங்குகிறான்?
Q ➤ 163. நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறவன் யார்?
Q ➤ 164. மற்றவர்களுடைய பிரயாசத்தின் பலனைப் பெற்றவர்கள் யார்?
Q ➤ 165. யாருடைய வார்த்தையினிமித்தம் சமாரியாவில் அநேகம் பேர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள்?
Q ➤ 166. இயேசு சமாரியாவில் எத்தனை நாள் தங்கினார்?
Q ➤ 167. சமாரியாவை விட்டு இயேசு எங்கே போனார்?
Q ➤ 168. ஒரு தீர்க்கதரிசிக்கு எங்கே கனமில்லையென்று இயேசு கூறினார்?
Q ➤ 169. இயேசு கலிலேயாவில் வந்தபோது அவரை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 170. ராஜாவின் மனுஷனுடைய குமாரன் எங்கே வியாதியாயிருந்தான்?
Q ➤ 171. "நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 172. ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என இயேசுவை அழைத்தவன் யார்?
Q ➤ 173. நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 174. ராஜாவின் மனுஷனுடைய குமாரன் உயிர் பிழைத்த நேரம் என்ன?
Q ➤ 175. இயேசு கலிலேயாவில் செய்த இரண்டாம் அற்புதம் எது?