Tamil Bible Quiz Galatians Chapter 1

Q ➤ 1. கலாத்தியருக்கு நிருபம் எழுதியவர் யார்?


Q ➤ 2. மனுஷரால் அப்போஸ்தலராயிராதவர் யார்?


Q ➤ 3. மனுஷன் மூலமாய் அப்போஸ்தலராயிராதவர் யார்?


Q ➤ 4. இயேசு கிறிஸ்துவினால் அப்போஸ்தலனாயிருந்தவர் யார்?


Q ➤ 5. இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பினவர் யார்?


Q ➤ 6. பிதாவாகிய தேவனால் அப்போஸ்தலனாயிருந்தவர் யார்?


Q ➤ 7. பவுலோடேகூட இருந்த சகோதரர் எங்கே உள்ள சபைகளுக்கு நிருபம் எழுதினார்கள்?


Q ➤ 8. பிதாவாகிய தேவனால் கலாத்தியருக்கு.......... ...........உண்டாவதாக?


Q ➤ 9. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் கலாத்தியருக்கு...........உண்டாவதாக?


Q ➤ 11. பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை விடுவிக்கும்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 12. இயேசு கிறிஸ்து எதற்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 13. இயேசு கிறிஸ்து யாருடைய சித்தத்தின்படி தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 14. என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் யாருக்கு மகிமை உண்டாவதாக?


Q ➤ 15. கலாத்தியரைக் கிறிஸ்துவின் கிருபையினால் அழைத்தவர் யார்?


Q ➤ 16. கிறிஸ்துவின் கிருபையினாலே தங்களை அழைத்தவரை இவ்வளவு சீக்கிரமாய் விட்டவர்கள் யார்?


Q ➤ 17. கலாத்தியர் எதற்குத் திரும்பினார்கள்?


Q ➤ 18. கலாத்தியர் வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பியதைப் பற்றி ஆச்சரியப்பட்டவர் யார்?


Q ➤ 19. வேறொரு.......இல்லையே?


Q ➤ 20. சிலர் யாரை கலகப்படுத்தினார்கள்?


Q ➤ 21. கலாத்தியரைக் கலகப்படுத்தினவர்கள் எதைப் புரட்ட மனதாயிருந்தார்கள்?


Q ➤ 22. எவர்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 23. வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் அவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 24. கலாத்தியர் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் அவர்களுக்குப் பிரசங்கிக்கிறவன் சபிக்கப்பட்டவன்?


Q ➤ 25. "நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்”- கேட்டவர் யார் ?


Q ➤ 26. "மனுஷனையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்?"- கூறியவர் யார்?


Q ➤ 27. நான் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் யாருடைய ஊழியக்காரனல்ல என்று பவுல் கூறினார்?


Q ➤ 28. பவுலினால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் யாருடைய யோசனையின்படியானதல்ல?


Q ➤ 29. பவுல் தான் பிரசங்கித்த சுவிசேஷத்தை யாரால் பெற்றதில்லை?


Q ➤ 30. பவுல் தான் பிரசங்கித்த சுவிசேஷத்தை யாரால் கற்றதில்லை?


Q ➤ 31. பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை அவருக்கு வெளிப்படுத்தியவர் யார்?


Q ➤ 32. "நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 33. பவுல் எதை மிகவும் துன்பப்படுத்தினார்?


Q ➤ 34. தேவனுடைய சபையைப் பாழாக்கியவர் யார்?


Q ➤ 35. தன் ஜனத்தாரில் தன் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்தில் தேறியிருந்தவர் யார்?


Q ➤ 36. பவுல் எதற்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவராய் இருந்தார்?


Q ➤ 37. தாயின் வயிற்றிலிருந்ததுமுதல் பவுலைப் பிரித்தெடுத்தவர் யார்?


Q ➤ 38. பவுலை அழைத்தவர் யார்?


Q ➤ 39. தேவன் பவுலை எதினாலே அழைத்தார்?


Q ➤ 40. பவுல் யாரை சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக தேவன் பவுலின் மேல் பிரியமாயிருந்தார்?


Q ➤ 41. பவுல் தேவனுடைய குமாரனை யாரிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்க தேவன் பிரியமாயிருந்தார்?


Q ➤ 42. தேவன் தம்முடைய குமாரனை யாருக்குள் வெளிப்படுத்த பிரியமாயிருந்தார்?


Q ➤ 43. தேவன் தம்முடைய குமாரனை தனக்குள் வெளிப்படுத்த பிரியமாயிருந்த போது பவுல் எவைகளோடு யோசனை பண்ணவில்லை?


Q ➤ 44. தனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்தில் எருசலேமுக்குப் போகாதவர் யார்?


Q ➤ 45. தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டுப் போனார்?


Q ➤ 46. அரபிதேசத்திலிருந்து பவுல் எங்கே திரும்பி வந்தார்?


Q ➤ 47. மூன்று வருஷம் சென்ற பின்பு பவுல் யாரைக் கண்டுகொள்ளும்படி போனார்?


Q ➤ 48. பேதுருவைக் கண்டுகொள்ளும்படி பவுல் எங்கே போனார்?


Q ➤ 49. பவுல் பேதுருவினிடத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?


Q ➤ 50. அப்போஸ்தலரில் பவுல் கண்டிருந்த ஒருவர் யார்?


Q ➤ 51. தான் காலாத்தியருக்கு எழுதினவை பொய்யல்லவென்று சொன்னவர் யார்?


Q ➤ 52. பவுல் தான் எழுதினவை பொய்யல்லவென்று யாருக்கு முன்பாக நிச்சயித்திருந்தார்?


Q ➤ 53. பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வந்தார்?


Q ➤ 54. யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தவர் யார்?


Q ➤ 55. பவுல் எதை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை யூதேயா தேசத்தில் கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 56. தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை யார் பின்பற்றுகிறான் என்று யூதேயா தேசத்திலே கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 57. பவுலைப்பற்றி யூதேயா தேசத்தார் யாரை மகிமைப்படுத்தினார்கள்?