Q ➤ தூபபீடத்தை எங்கே வைக்க வேண்டும்?Ans ➤ சாட்சிபெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும் சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக
Q ➤ தூபபீடத்தின்மேல் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதெல்லாம் தூபங்காட்ட வேண்டும்?Ans ➤ காலைதோறும் சுகந்த தூபம், மாலையில் ளக்கேற்றும்போது, விளக்குகளை விளக்கும்போது
Q ➤ வருஷத்தில் ஒருமுறை எதனால் தூபபீடத்தின் கொம்புகள்மேல் பிராயசித்தம்பண்ண வேண்டும்?Ans ➤ பாவ நிவாரணபலியின் இரத்தத்தினால்
Q ➤ இஸ்ரவேல் புத்திரர் கணக்கு பார்க்கும்படி எண்ணப்படுகிறபோது, வாதை உண்டாகாதபடி எதைக் கொடுக்க வேண்டும்?Ans ➤ கர்த்தருக்கு மீட்கும் பொருளை
Q ➤ தன் ஆத்துமாவுக்கு பாவநிவிர்த்தியாக அரை சேக்கல் கொடுக்க வேண்டியவன் யார்?Ans ➤ இருபது வயது முதற்கொண்டு எண்ணப்படுகிறவன்
Q ➤ ஒரு சேக்கல் எவ்வளவு கேரா?Ans ➤ இருபது
Q ➤ பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரவேலரிடம் வாங்கி எதற்கு கொடுக்க வேண்டும்?Ans ➤ ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்கு
Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் சாகாதபடிக்கு எப்பொழுதெல்லாம் தங்களைக் கழுவவேண்டும்?Ans ➤ ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது கர்த்தருக்கு தகனத்தைக் கொளுத்தவும், பலிபீடத்தில் ஆராதனை செய்ய சேரும்போதும்
Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு எதை உண்டு பண்ணவேண்டும்?Ans ➤ வெண்கலத்தால் ஒரு தொட்டியும் அதன் பாதமும்
Q ➤ பரிசுத்த அபிஷேக தைலத்தை எவைகளால் உண்டு பண்ணவேண்டும்? Ans ➤ சுத்தமான வெள்ளைப்போளத்தில் ஐந்நூறு சேக்கல் எடை,
Q ➤ தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போகிறவர்கள் யார்? Ans ➤ மகா பரிசுத்தமான தூபவர்க்கத்தை முகருகிறதற்காக செய்கிறவனும், பரிசுத்த அபிஷேக தைலத்தை அந்நியன்மேல் வார்க்கிறவனும்