Tamil Bible Quiz Daniel Chapter 6

Q ➤ ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்கு யாரை ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது?


Q ➤ ராஜ்யத்தை ஆளும்படிக்கு எத்தனை தேசாதிபதிகளை ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது?


Q ➤ தனக்கு நஷ்டம் வராதபடிக்கு தேசாதிபதிகளை ஏற்படுத்தியவன் யார்?


Q ➤ தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக எத்தனை பிரதானிகள் ஏற்படுத்தப்பட்டார்கள்?


Q ➤ மூன்று பிரதானிகளில் ஒருவனாயிருந்தவன் யார்?


Q ➤ பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தவன் யார்?


Q ➤ யாரை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த தரியு நினைத்தான்?


Q ➤ தானியேலுக்குள். ......இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக்க தரியு நினைத்தான்?


Q ➤ தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடியவர்கள் யார்?


Q ➤ பிரதானிகளும் தேசாதிபதிகளும் எதிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்?


Q ➤ தானியேலிடம் எதைக் கண்டுபிடிக்க தேசாதிபதிகளால் கூடாதிருந்தது?


Q ➤ தானியேலின்மேல் சுமத்த யாதொரு ....... காணப்படவில்லை?


Q ➤ எதினால் தானியேலின்மேல் குற்றமும் குறைவும் காணப்படவில்லை?


Q ➤ தானியேலைக் குற்றப்படுத்தும் முகாந்தரத்தை எதிலே கண்டுபிடிக்கலாம் pஎன்று தேசாதிபதிகள் கூறினார்கள்?


Q ➤ தானியேலிடம் எதைத் தவிர வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரம் கண்டுபிடிக்கக்கூடாதென்று தேசாதிபதிகள் கூறினார்கள்?


Q ➤ பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி யாரிடத்தில் போனார்கள்?


Q ➤ எத்தனைநாள் ராஜாவிடம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்று தேசாதிபதிகளும் பிரதானிகளும் ஆலோசனைபண்ணினார்கள்?


Q ➤ முப்பது நாள் வரையில் எவர்களை நோக்கி விண்ணப்பிக்கக் கூடாது என்று தலைவர்கள் ஆலோசனைபண்ணினார்கள்?


Q ➤ முப்பது நாள் எந்த தேவனையோ, மனுஷனையோ, நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறவன் எங்கே போடப்பட தலைவர்கள் கூறினார்கள்?


Q ➤ முப்பது நாள் வரையில் ராஜாவை மட்டுமே விண்ணப்பிப்பதைக் குறித்து ராஜா எதைப் பிறப்பிக்க தலைவர்கள் கூறினார்கள்?


Q ➤ மாறாத பிரமாணத்தையுடையவர்கள் யார்?


Q ➤ எது மாற்றப்படாதபடி, ராஜா அதற்குக் கையெழுத்து வைக்க தலைவர்கள் கூறினார்கள்?


Q ➤ கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தவன் யார்?


Q ➤ எதற்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று தானியேல் அறிந்தான்?


Q ➤ எருசலேமுக்கு நேராக ஜெபம்பண்ணியவன் யார்?


Q ➤ கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதை அறிந்தபோதிலும் தேவனிடம் ஜெபம்பண்ணியவன் யார்?


Q ➤ தானியேல் தினமும் எத்தனைவேளை ஜெபம்பண்ணினான்?


Q ➤ தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டவர்கள் யார்?


Q ➤ தானியேல் எந்த தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டு வந்தவன்?


Q ➤ தானியேல் எதை மதிக்கவில்லையென்று ராஜாவிடம் தலைவர்கள் கூறினார்கள்?


Q ➤ "தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ தானியேலைக் குறித்து கூறப்பட்ட வார்த்தைகளைக் கேட்டபோது தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டவன் யார்?


Q ➤ தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்தவன் யார்?


Q ➤ தரியு ராஜா தானியேலைத் தப்புவிக்கிறதற்காக எம்மட்டும் பிரயாசப்பட்டான்?


Q ➤ எவைகள் மாற்றப்படக்கூடாதென்று மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருந்தது?


Q ➤ சிங்கங்களின் கெபியில் போடப்பட்டவன் யார்?


Q ➤ "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ கெபியின் வாசலின்மேல் வைக்கப்பட்டது எது?


Q ➤ தரியு தன் மோதிரத்தினாலும், தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் எதின்மேல் முத்திரைபோட்டான்?


Q ➤ எது மாற்றப்படாதபடிக்கு ராஜா மோதிரங்களினால் முத்திரைபோட்டான்?


Q ➤ தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம் பண்ணாமலிருந்தவன் யார்?


Q ➤ தரியு ராஜா எவைகளை தனக்கு முன்பாக வரவொட்டாதிருந்தான்?


Q ➤ தானியேல் நிமித்தம் யாருக்கு நித்திரை வராமற்போயிற்று?


Q ➤ சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனவன் யார்?


Q ➤ தரியு ராஜா எப்போது சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்?


Q ➤ கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டவன் யார்?


Q ➤ "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே" - என கூப்பிட்டவன் யார்?


Q ➤ "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்க- ளுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டவர் யார்?


Q ➤ தேவனுக்கு முன்பாகக் குற்றமற்றவனாய்க் காணப்பட்டவன் யார்?


Q ➤ தானியேல் ராஜாவுக்கு முன்பாக செய்ததில்லை?


Q ➤ தானியேல் நிமித்தம் தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டவன் யார்?


Q ➤ தரியு ராஜா தானியேலை எங்கிருந்து தூக்கிவிடச் சொன்னான்?


Q ➤ சிங்கக்கெபியில் போடப்பட்ட யாருக்கு ஒரு சேதமும் காணப்படவில்லை?


Q ➤ தானியேலுக்கு ஏன் ஒரு சேதமும் காணப்படவில்லை?


Q ➤ தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரைக் கொண்டுவரச் சொன்னவன் யார்?


Q ➤ எவர்களை சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்?


Q ➤ கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் யாருடைய எலும்புகளை நொறுக்கிப்போட்டது?


Q ➤ தன் ஆளுகைக்குள் உள்ளவர்கள் யாருக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று தரியு எழுதினான்?


Q ➤ "அவர் ஜீவனுள்ள தேவன்" - தரியு யாரைக் குறித்து கூறினான்?


Q ➤ தானியேலின் தேவன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர் என்று கூறியவன் யார்?


Q ➤ யாருடைய ராஜ்யம் அழியாதது என்று தரியு கூறினான்?


Q ➤ தானியேலின் தேவனின்............. கூறினான்?


Q ➤ யார் தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும் என்று தரியு கூறினான்?


Q ➤ யார் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர் என்று தரியு கூறினான்?


Q ➤ தானியேலின் தேவன் எங்கே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார் என்று தரியு கூறினான்?


Q ➤ எவர்களுடைய ராஜ்யபார காலத்தில் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது?