Tamil Bible Quiz Acts Chapter 2

Q ➤ 41. சீஷர்கள் ஒருமனப்பட்டு கூடி வந்த நாள் எது?


Q ➤ 42. பெந்தெகொஸ்தே நாளில் எங்கிருந்து முழக்கமுண்டானது?


Q ➤ 43. சீஷர்கள் உட்கார்ந்திருந்த வீடுமுழுவதையும் நிரப்பியது எது?


Q ➤ 44. சீஷர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது எது?


Q ➤ 45. பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 46. ஆவியானவர் தந்தருளிய வரத்தின்படி பேசியவர்கள் யார்?


Q ➤ 47. ஆவியானவர் தந்த வரத்தின்படி சீஷர்கள்........ தொடங்கினார்கள்?


Q ➤ 48. எருசலேமில் வாசம்பண்ணிய தேவ பக்தியுள்ளவர்கள் யார்?


Q ➤ 49. தேவபக்தியுள்ள யூதர்கள் எங்கிருந்து வந்து எருசலேமில் வாசம்பண்ணினார்கள்?


Q ➤ 50. சீடர்களின் பேச்சைக் கேட்ட திரளான ஜனங்கள் அடைந்தது என்ன?


Q ➤ 51. திரளான ஜனங்கள் தங்களுடைய ....... பேசக்கேட்டார்கள்?


Q ➤ 52. ஜனங்களெல்லாரும் ஒருவரையொருவர் பார்த்து தங்களுடைய பாஷைகளிலே எவைகளைப் பேசக்கேட்கிறோம் என்றார்கள்?


Q ➤ 53. இதென்னமாய் முடியுமோ என்று சொல்லியவர்கள் யார்?


Q ➤ 54. சீஷர்கள் எதினால் நிறைந்திருக்கிறார்கள் என்று சிலர் பரியாசம் பண்ணினார்கள்?


Q ➤ 55. நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல என்று கூறியவன் யார்?


Q ➤ 56.பேதுரு ஜனங்களோடு இந்த வார்த்தைகளைக் கூறியபோது என்ன மணிவேளையாயிருந்தது?


Q ➤ 57. பெந்தெகொஸ்தே நாளில் யாருடைய தீர்க்கதரிசனம் நிறைவேறியது?


Q ➤ 58. மாம்சமான யாவர் மேலும் ஆவி ஊற்றப்படும் நாள் எது?


Q ➤ 59. கடைசி நாட்களில் குமாரரும் குமாரத்திகளும் என்ன சொல்லுவார்கள்?


Q ➤ 60. கடைசி நாட்களில் வாலிபர் எவைகளைக் அடைவார்கள்?


Q ➤ 61. கடைசி நாட்களில் மூப்பர்கள் எவைகளைக் காண்பார்கள்?


Q ➤ 62. கடைசி நாட்களில் கர்த்தருடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் ஊற்றப்படுவது எது?


Q ➤ 63. ஆவி ஊற்றப்படும்போது ஊழியக்காரரும் ஊழியக்காரிகளும் சொல்வது எது?


Q ➤ 64. எது வருமுன் சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்?


Q ➤ 65. கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்......?


Q ➤ 66. தேவன் யாரைக்கொண்டு பலத்த செய்கைகளையும் அற்புதங்களையும் நடப்பித்தார்?


Q ➤ 67. தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும் முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்டவர் யார்?


Q ➤ 68. அக்கிரமக்காரருடைய கைகளினாலே இயேசுவை கொலை செய்தவர்கள் யார்?


Q ➤ 69. இஸ்ரவேலர் இயேசுவை எதிலே ஆணியடித்துக் கொலை செய்தார்கள்?


Q ➤ 70. இயேசுவின் மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினவர் யார்?


Q ➤ 71. மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தவர் யார்?


Q ➤ 72. ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர் என்று முன்னறிவித்தவர் யார்?


Q ➤ 73. பேதுரு கூறிய கோத்திரத்தலைவன் யார்?


Q ➤ 74. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?


Q ➤ 75. மாம்சத்திற்கும், ஆத்துமாவிற்கும் அழிவில்லாதவர் யார்?


Q ➤ 76. கிறிஸ்துவின் ஆத்துமாவுக்கும் மாம்சத்துக்கும் அழிவில்லாததை முன்னறிந்தவன் யார்?


Q ➤ 77. தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டவர் யார்?


Q ➤ 78. பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி இயேசு பெற்றுக்கொண்டது என்ன?


Q ➤ 79. யார், பரலோகத்துக்கு எழுந்து போகவில்லை என்று பேதுரு கூறினார்?


Q ➤ 80. தேவன் யாரை ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்?


Q ➤ 81. இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று எவர்கள் நிச்சயமாய் அறியக்கடவர்கள்?


Q ➤ 82. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலரிடமும் கேட்டவர்கள் யார்?


Q ➤ 83. எதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும்?


Q ➤ 84. யாருடைய நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்?


Q ➤ 85. ஞானஸ்நானம் பெறுவதால் யாருடைய வரம் கிடைக்கும்?


Q ➤ 86. கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறதாக பேதுரு கூறியது எது?


Q ➤ 87. எந்த சந்ததியை விட்டு விலகி தங்களை இரட்சித்துக் கொள்ளும்படி பேதுரு புத்தி சொன்னான்?


Q ➤ 88. பேதுருவுடைய வார்த்தையை எப்படி ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்?


Q ➤ 89. பேதுருவின் பிரசங்கத்தால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 90. அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 91. அநேக அற்புதங்களும் அடையாளங்களும் யாரால் செய்யப்பட்டது?


Q ➤ 92. சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தவர்கள் யார்?


Q ➤ 93. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, பகிர்ந்து கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 94. விசுவாசிகள் எப்படிப்பட்டவர்களாய் தேவாலயத்தில் அநுதினமும் தரித்திருந்தார்கள்?


Q ➤ 95. வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 96. விசுவாசிகள் எவர்களிடத்தில் தயவு பெற்றிருந்தார்கள்?


Q ➤ 97. அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் யார்?