Tamil Bible Quiz 2 Chronicles Chapter 34

Q ➤ 900. யோசியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 901. யோசியா எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 902. யோசியா கர்த்தருடைய பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 903. யோசியா யாருடைய வழிகளில் வலதுஇடதுபுறம் விலகாமல் நடந்தான்?


Q ➤ 904. யோசியா தன் ராஜ்யபாரத்தின் எத்தனையாவது வருஷத்தில் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்?


Q ➤ 905. சிலைகளையும் விக்கிரகங்களையும் உடைத்து, அவற்றை யோசியா எவைகளின்மேல் தூவினான்?


Q ➤ 906. யோசியா யாருடைய எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்தான்?


Q ➤ 907. யோசியா இஸ்ரவேலிலெங்கும் எவைகளைத் தகர்த்தான்?


Q ➤ 908. யோசியா இஸ்ரவேல் தேசத்திலிருந்து எவைகளை நொறுக்கித் தூளாக்கினான்?


Q ➤ 909. யோசியா தன் ராஜ்யபாரத்தின் 18-ம் வருஷத்தில் எதை பழுதுபார்க்கும்படிக்கு மனுஷரை அனுப்பினான்?


Q ➤ 910. கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி யோசியா எவர்களை அனுப்பினான்?


Q ➤ 911. யோசியாவின் நாட்களில் பிரதான ஆசாரியன் யார்?


Q ➤ 912. தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவந்த பணத்தை யாருடைய கையில் கொடுத்தார்கள்?


Q ➤ 913. ஆலயத்தின் விசாரிப்புக்காரர் பணத்தை யாருடைய கையில் கொடுத்தார்கள்?


Q ➤ 914. கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டெடுத்தவன் யார்?


Q ➤ 915. இல்க்கியா நியாயப்பிரமாண புஸ்தகத்தை யார் கையில் கொடுத்தான்?


Q ➤ 916. சாப்பான் நியாயப்பிரமாண புஸ்தகத்தை யாரிடத்திற்குக் கொண்டு போனான்?


Q ➤ 917. சாப்பான் யாராய் இருந்தான்?


Q ➤ 918. ராஜாவுக்கு முன்பாக நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தவன் யார்?


Q ➤ 919. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டவன் யார்?


Q ➤ 920. கண்டெடுக்கப்பட்ட புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் யூதா, இஸ்ரவேலுக்காக கர்த்தரிடத்தில் விசாரிக்கக் கூறியவன் யார்?


Q ➤ 921. "நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது"- கூறியவன் யார்?


Q ➤ 922. யோசியாவினால் அனுப்பப்பட்டவர்கள் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி யாரிடம் போனார்கள்?


Q ➤ 923. உல்தாளின் கணவனின் பெயர் என்ன?


Q ➤ 924. சல்லூம் யாராய் இருந்தான்?


Q ➤ 925. புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களை எங்கே வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 926. எது அவிந்துபோகாதபடிக்கு யூதாவின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைத்தார்?


Q ➤ 927. கர்த்தர் யாருடைய விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கூறினார்?


Q ➤ 928. கர்த்தர் யூதாவின்மேல் வரப்பண்ணும் பொல்லாப்பை யாருடைய கண்கள் காண்பதில்லை?


Q ➤ 929. யோசியா உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளை எவர்களுடைய காது கேட்க வாசித்தான்?


Q ➤ 930. கர்த்தருடைய கற்பனைகள், சாட்சிகள், கட்டளைகளை கைக்கொள்ளுவேன் என்று உடன்படிக்கைபண்ணியவன் யார்?


Q ➤ 931. எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் உடன்படிக்கைக்கு உட்படப்பண்ணியவன் யார்?


Q ➤ 932. யார், உயிரோடிருந்த நாளெல்லாம் ஜனங்கள் தேவனை விட்டு பின்வாங்கவில்லை?