Q ➤ 872. மனாசே ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?
Q ➤ 873. மனாசே எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?
Q ➤ 874. மனாசே கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 875. தன் தகப்பன் தகர்த்துப்போட்ட மேடைகளை திரும்பக் கட்டியவன் யார்?
Q ➤ 876. கர்த்தருடைய ஆலயத்தில் மனாசே எவைகளைக் கட்டினான்?
Q ➤ 877. மனாசே ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் எவைகளுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்?
Q ➤ 878. மனாசே எங்கே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணினான்?
Q ➤ 879. கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தவன் யார்?
Q ➤ 880. மனாசே தேவனுடைய ஆலயத்தில் எதை ஸ்தாபித்தான்?
Q ➤ 881. யூதாவும் எருசலேமும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணியவன் யார்?
Q ➤ 882. மனாசேயை முட்செடிகளில் பிடித்தவர்கள் யார்?
Q ➤ 883. அசீரியா ராஜாவின் சேனாபதிகள் மனாசேயை எவைகளால் கட்டினார்கள்?
Q ➤ 884. மனாசேயை அசீரியா ராஜாவின் சேனாபதிகள் எங்கேக் கொண்டு போனார்கள்?
Q ➤ 885. தான் நெருக்கப்படுகையில் தேவனுக்கு முன்பாகத் தன்னை மிகவும் தாழ்த்தியவன் யார்?
Q ➤ 886. கர்த்தர் யாரை தன்னுடைய ராஜ்யத்திற்கு திரும்ப வரப்பண்ணினார்?
Q ➤ 887. மனாசே தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தை எதுமுதல் எதுவரை கட்டினான்?
Q ➤ 888. யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் மனாசே யாரை வைத்தான்?
Q ➤ 889. மனாசே எங்கேயிருந்து அந்நிய தேவர்களையும் விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டான்?
Q ➤ 890. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்க யூதாவுக்குக் கட்டளையிட்டவன் யார்?
Q ➤ 891. மனாசேயை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?
Q ➤ 892. மனாசேயின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?
Q ➤ 893. ஆமோன் ராஜாவானபோது அவன் வயது என்ன?
Q ➤ 894. ஆமோன் எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?
Q ➤ 895. ஆமோன் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 896. ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணியவர்கள் யார்?
Q ➤ 897. ஆமோனின் ஊழியக்காரர் அவனை எங்கேக் கொன்றுபோட்டார்கள்?
Q ➤ 898. ஆமோனுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணியவர்களைக் கொன்று போட்டவர்கள் யார்?
Q ➤ 899. ஆமோனின் ஸ்தானத்தில் ஜனங்கள் யாரை ராஜாவாக்கினார்கள்?