Tamil Bible Quiz 2 Chronicles Chapter 26

Q ➤ 673. அமத்சியா இறந்தபின் ராஜாவாக்கப்பட்டவன் யார்?


Q ➤ 674. உசியாவை ராஜாவாக்கினவர்கள் யார்?


Q ➤ 675. உசியா ராஜாவானபோது அவன் வயது என்ன?


Q ➤ 676. ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டவன் யார்?


Q ➤ 677. உசியா எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 678. உசியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 679. உசியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 680. தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்தவன் யார்?


Q ➤ 681. உசியா யாருடைய நாட்களில் தேவனைத்தேட மனதிணங்கியிருந்தான்?


Q ➤ 682. உசியா பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி இடித்துப்போட்ட அலங்கங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 683. அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டியவன் யார்?


Q ➤ 684. பெலிஸ்தர், அரபியர் மற்றும் மெகுனியரை வெல்ல உசியாவுக்குத் துணைநின்றவர் யார்?


Q ➤ 685. உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 686. உசியா எருசலேமில் எவைகள்மேல் கோபுரங்களைக் கட்டினான்?


Q ➤ 687. வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தவன் யார்?


Q ➤ 688. உசியாவின் நாட்களில் பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகை எவ்வளவு?


Q ➤ 689. உசியா ராஜாவுக்கு பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற எத்தனைபேரைச் சேர்ந்த சேனை இருந்தது?


Q ➤ 690. யார்,பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டானது?


Q ➤ 691. தனக்குக் கேடுண்டாகுமட்டும் யாருடைய மனம் மேட்டிமையானது?


Q ➤ 692. தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தவன் யார்?


Q ➤ 693. ஆசாரியனாகிய அசரியாவும் எண்பது ஆசாரியர்களும் உசியாவிடம் எங்கேயிருந்து வெளியே போகக் கூறினார்கள்?


Q ➤ 694. உசியாவின் நெற்றியிலே தோன்றியது என்ன?


Q ➤ 695. உசியா யாரோடே கோபமாய்ப் பேசுகிறபோது அவன் நெற்றியில் குஷ்டரோகம் தோன்றியது?


Q ➤ 696. உசியாவின் நெற்றியில் குஷ்டரோகம் பிடித்திருக்கிறதைக் கண்டு அவனைத் தீவிரமாய் வெளிப்படப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 697. கர்த்தர் தன்னை அடித்ததினால் வெளியே போகத் தீவிரப்பட்டது யார்?


Q ➤ 698. தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்த ராஜா யார்?


Q ➤ 699. உசியா மரணநாள்மட்டும் எங்கே வாசம்பண்ணினான்?


Q ➤ 700. அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து ஜனங்களை நியாயம் விசாரித்தவன் யார்?


Q ➤ 701. யோதாம் யாருடைய குமாரன்?


Q ➤ 702. உசியாவின் மற்ற வர்த்தமானங்களை எழுதியவன் யார்?


Q ➤ 703. ஏசாயா என்பவன் யார்?


Q ➤ 704. ஏசாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 705. ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்தில் அடக்கம்பண்ணப்பட்ட ராஜா யார்?


Q ➤ 706. உசியாவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?