Q ➤ 293.ஆசாவின் 36-ம் வருஷத்தில் யூதாவுக்கு விரோதமாக வந்தவன் யார்?
Q ➤ 294. பாஷா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 295. ஒருவரும் ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு பாஷா எதைக் கட்டினான்?
Q ➤ 296. ஆசா ஆலயத்திலும் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களை எடுத்து யாருக்கு அனுப்பினான்?
Q ➤ 297. பென்னாதாத் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 298. தன் சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பியவன் யார்?
Q ➤ 299. ராமாவைக் கட்டின கற்கள் மற்றும் மரங்களால் ஆசா எவைகளைக் கட்டினான்?
Q ➤ 300. ஆசாவினிடத்தில் வந்து கர்த்தருடைய வார்த்தையைக் கூறியவன் யார்?
Q ➤ 301. ஆசா யாரைச் சார்ந்துக்கொண்டதினால் சீரியா ராஜாவின் இராணுவம் அவன் கைக்குத் தப்பினது?
Q ➤ 302. யாருக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது?
Q ➤ 303. "இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும்"யார், யாரிடம் கூறியது?
Q ➤ 304. அனானியின்மேல் சினந்து, அவனை காவலறையில் வைத்தவன் யார்?
Q ➤ 305. யாருடைய கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது?
Q ➤ 306. ஆசா தன் வியாதியில் யாரைத் தேடினான்?
Q ➤ 307. ஆசா தான் அரசாண்ட எத்தனையாவது வருஷத்தில் மரித்தான்?
Q ➤ 308. யாரை கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த மெத்தையின்மேல் வளர்த்தினர்?
Q ➤ 309. ஆசா எங்கே அடக்கம்பண்ணப்பட்டான்?