Q ➤ 900. தலைவர்கள், அதிபதிகள், பிரபுக்கள், பிரதானிகள், பராக்கிரமசாலிகள் மற்றும் பலசாலிகளை தாவீது எங்கேக் கூடிவரச்செய்தான்?
Q ➤ 901. ........தங்குவதற்கு ஆலயத்தைக் கட்ட தாவீது மனதில் நினைத்திருந்தான்?
Q ➤ 902. ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஆயத்தம் பண்ணியவன் யார்?
Q ➤ 903. யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தியவன் யார்?
Q ➤ 904. யூதாவின் வம்சத்தில் கர்த்தர் எதைத் தலைமையாகத் தெரிந்து கொண்டார்?
Q ➤ 905. தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, அவன்மேல் பிரியம் வைத்தவர் யார்?
Q ➤ 906. கர்த்தருடைய ராஜ்யபாரத்தின்மேல் உட்கார, கர்த்தர் தாவீதின் குமாரரில் யாரைத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 907. கர்த்தரின் ஆலயத்தையும் பிரகாரங்களையும் யார் கட்டக்கடவன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 908. எல்லா இருதயங்களையும் ஆராய்கிறவர் யார்?
Q ➤ 909.கர்த்தர் .......தோற்றங்களையெல்லாம் அறிகிறார்?
Q ➤ 910. தேடினால் தென்படுபவர் யார்?
Q ➤ 911. ஆலயத்தைக் கட்டவேண்டிய மாதிரியைக் கட்டளை கொடுத்தது யார்?
Q ➤ 912. தாவீது பற்பல வேலைக்கு வேண்டிய எவைகளுக்காக பொன்னைக் கொடுத்தான்?
Q ➤ 913. தாவீது சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக எவைகளைக் கொடுத்தான்?
Q ➤ 914. தூபங்காட்டும் பீடத்தைச் செய்வதற்கு தாவீது எதைக் கொடுத்தான்?
Q ➤ 915. செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடுவது எது?
Q ➤ 916. 1 நாளாகமம் 28-ம் அதிகாரத்தில் வாகனம் என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 917. கேருபீன்களின் மாதிரியைக் கொடுத்தவன் யார்?
Q ➤ 918. தாவீது கொடுத்த மாதிரி, எப்படி தாவீதுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 919. "நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 920. ஆலயத்து வேலைக்கெல்லாம் யாருடைய வகுப்புகள் இருக்கிறதாக தாவீது கூறினான்?
Q ➤ 921. சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும் இருக்கிறதாகக் கூறியவன் யார்?