Tamil Bible Quiz 1 Chronicles Chapter 11

Q ➤ 308. இஸ்ரவேலர் எல்லாரும் யாரிடத்தில் கூடிவந்தார்கள்?


Q ➤ 309. "நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்"யார். யாரிடம் கூறியது?


Q ➤ 310. சவுல் ராஜாவாயிருக்கும்போதே, இஸ்ரவேலை நடத்திக் கொண்டுபோய், நடத்திக்கொண்டு வந்தவன் யார்?


Q ➤ 311. இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பான் என்று தாவீதிடம் சொல்லியிருந்தவர் யார்?


Q ➤ 312. எப்ரோனில் தாவீது யாரோடே உடன்படிக்கை பண்ணிக்கொண்டான்?


Q ➤ 313. தாவீது இஸ்ரவேலின் மூப்பரோடே யாருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினான்?


Q ➤ 314. தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 315. கர்த்தர் யாரைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கப்பட்டான்?


Q ➤ 316. தாவீது ராஜாவாக்கப்பட்ட பின்பு இஸ்ரவேலரோடே எங்கே போனான்?


Q ➤ 317. எருசலேமின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 318. எருசலேமில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 319. நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்று தாவீதிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 320. சீயோன் கோட்டையைப் பிடித்தவன் யார்?


Q ➤ 321. சீயோன் கோட்டையின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 322. யாரை முறிய அடிக்கிறவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பான் என்று தாவீது சொல்லியிருந்தான்?


Q ➤ 323. எபூசியரை முறிய அடிக்கிறதில் முந்தி ஏறித் தலைவனானவன் யார்?


Q ➤ 324. யோவாபின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 325. தாவீதின் நகரத்தில் யார் வாசம்பண்ணினபடியால் அது தாவீதின் நகரம் என்னப்பட்டது?


Q ➤ 326. தாவீதின் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டியவன் யார்?


Q ➤ 327. தாவீதின் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தவன் யார்?


Q ➤ 328. நாளுக்குநாள் விருத்தியடைந்தவன் யார்?


Q ➤ 329. தாவீதோடேகூட இருந்தவர் யார்?


Q ➤ 330. சேர்வைக்காரரின் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 331.யாஷோபியாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 332. முந்நூறுபேர்களின்மேல் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 333. யாஷோபியாமுக்கு இரண்டாவதாக இருந்தவன் யார்?


Q ➤ 334. எலெயாசாரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 335. பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமைவயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தவர்கள் யார்?


Q ➤ 336. இஸ்ரவேல் ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடிப்போனபோது தாவீதோடே இருந்தவன் யார்?


Q ➤ 337. அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியில் தாவீதினிடத்தில் போயிருந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 338. கன்மலைக் கெபியில் தாவீதினிடத்தில் போயிருந்த மூன்றுபேரும் யார்?


Q ➤ 339. பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது ஒரு அரணாண இடத்தில் இருந்தவன் யார்?


Q ➤ 340. பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருந்தது எது?


Q ➤ 341. பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருந்த கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல் கொண்டவன் யார்?


Q ➤ 342. "என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார்?"-கேட்டவன் யார்?


Q ➤ 343. பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருந்த கிணற்றுத் தண்ணீரை மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 344. மூன்று தலைவரும் எதற்குள் துணிந்துபோய் தாவீதுக்குத் தண்ணீர் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 345. மூன்று தலைவரும் கொண்டுவந்தத் தண்ணீரை குடிக்க மனதில்லாதிருந்தவன் யார்?


Q ➤ 346. மூன்று தலைவரும் கொண்டுவந்தத் தண்ணீரை தாவீது என்ன செய்தான்?


Q ➤ 347. மூன்று தலைவரும் எதை எண்ணாமல் போய் தாவீதுக்குத் தண்ணீர் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 348. மூன்று தலைவரும் தனக்குக் கொண்டுவந்த தண்ணீரை தாவீது எதற்கு ஒப்புமைப்படுத்தினான்?


Q ➤ 349. மூன்றுபேரில் பிரதானமானவன் யார்?


Q ➤ 350. அபிசாயின் சகோதரன் யார்?


Q ➤ 351. ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்தவன் யார்?


Q ➤ 352. மூன்றுபேரில் தலைவனானவன் யார்?


Q ➤ 353. யோய்தா என்பவன் யார்?


Q ➤ 354. செய்கைகளில் வல்லவனாயிருந்தவன் யார்?


Q ➤ 355. பெனாயாவின் ஊர் எது?


Q ➤ 356. மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றவன் யார்?


Q ➤ 357. உறைந்த மழை பெய்த நாளில் கெபிக்குள் இறங்கி, சிங்கத்தைக்கொன்றவன் யார்?


Q ➤ 358. பெனாயா எப்படிப்பட்ட எகிப்தியனைக் கொன்றுபோட்டான்?


Q ➤ 359. ஐந்துமுழ உயரமான எகிப்தியனிடத்தில் இருந்தது என்ன?


Q ➤ 360. எகிப்தியனிடம் இருந்த ஈட்டி எப்படிப்பட்டது?


Q ➤ 361. ஐந்துமுழ உயரமான எகிப்தியனின் கையிலிருந்து ஈட்டியைப் பறித்தவன் யார்?


Q ➤ 362. பெனாயா, ஐந்துமுழ உயரமான எகிப்தியனை எதினால் கொன்றுபோட்டான்?


Q ➤ 363. மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தவன் யார்?


Q ➤ 364. முப்பதுபேரிலும் மேன்மையுள்ளவனாயிருந்தவன் யார்?


Q ➤ 365. பெனாயாவை தாவீது யாருக்குத் தலைவனாக வைத்தான்?


Q ➤ 366. ஊராயி எந்த தேசத்தான்?


Q ➤ 367. யோவாபின் ஆயுததாரியின் பெயர் என்ன?


Q ➤ 368. ரூபனியரின் தலைவனின் பெயர் என்ன?


Q ➤ 369. சீசாவின் குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 370. அதினாவோடே எத்தனைபேர் இருந்தார்கள்?