Q ➤ 279. இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 280. பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடந்த யுத்தத்தில் முறிந்தோடியவர்கள் யார்?
Q ➤ 281. இஸ்ரவேலர் எங்கே வெட்டுண்டு விழுந்தார்கள்?
Q ➤ 282. சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்தவர்கள் யார்?
Q ➤ 283. பெலிஸ்தரால் வெட்டப்பட்ட சவுலின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 284. பெலிஸ்தரால் வெட்டப்பட்ட சவுலின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 285. யாருக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது?
Q ➤ 286. சவுலைக்கண்டு நெருங்கினவர்கள் யார்?
Q ➤ 287. வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டவன் யார்?
Q ➤ 288."நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 289. யார், தன்னை அவமானப்படுத்தாதபடிக்கு ஆயுததாரி தன்னைக் குத்திப்போட சவுல் கூறினான்?
Q ➤ 290. பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தவன் யார்?
Q ➤ 291. சவுல் செத்துப்போனதைக் கண்டபோது, தானும் பட்டயத்தின்மேல் விழுந்தவன் யார்?
Q ➤ 292. சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனதைக் கண்டபோது, தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனவர்கள் யார்?
Q ➤ 293. பெலிஸ்தர் சவுலிடமிருந்து எவைகளை எடுத்துக்கொண்டு போனார்கள்?
Q ➤ 294. பெலிஸ்தர் சவுலின் வஸ்திரங்கள், தலை மற்றும் ஆயுதங்களை யாருக்குப் பிரசித்தப்படுத்தும்படி தேசத்தில் செய்தி அனுப்பினார்கள்?
Q ➤ 295. சவுலின் ஆயுதங்களை பெலிஸ்தர் எங்கே வைத்தார்கள்?
Q ➤ 296. பெலிஸ்தர் சவுலின் தலையை எங்கே தூக்கிவைத்தார்கள்?
Q ➤ 297. பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டது யார்?
Q ➤ 298. யாபேஸ் பட்டணம் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 299. சவுல் மற்றும் அவன் குமாரரின் உடல்களை எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்தவர்கள் யார்?
Q ➤ 300. சவுல் மற்றும் அவன் குமாரரின் உடல்களை யாபேஸ் மனுஷர் எங்கே அடக்கம்பண்ணினார்கள்?
Q ➤ 301. சவுலுக்காக யாபேசின் ஜனங்கள் எத்தனைநாள் உபவாசம் பண்ணினார்கள்?
Q ➤ 302. சவுல் யாருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவில்லை?
Q ➤ 303. சவுல் யாருக்குத் துரோகம் செய்தான்?
Q ➤ 304. சவுல் கர்த்தரைத் தேடாமல் யாரைத் தேடினான்?
Q ➤ 305. சவுல் செய்த துரோகத்தினிமித்தம் அவனைக் கொன்றவர் யார்?
Q ➤ 306. கர்த்தர் சவுலின் ராஜ்யபாரத்தை யார் வசமாகத் திருப்பினார்?
Q ➤ 307. தாவீதின் அப்பா பெயர் என்ன?