Q ➤ பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகாவிட்டால் எங்கே பிரவேசிக்க முடியாது?
Q ➤ பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுபவன் யார்?
Q ➤ இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிற சிறியரில் ஒருவருக்கும் எதை உண்டாக்கக் கூடாது?
Q ➤ சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிற ஒருவனுடைய கழுத்தில் எதைக் கட்ட வேண்டும்?
Q ➤ எதினிமித்தம் உலகத்திற்கு ஐயோ என்று இயேசு கூறுகிறார்?
Q ➤ எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ அவனுக்கு........?
Q ➤ கையாவது, காலாவது இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்யவேண்டும்?
Q ➤ கண் இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ யார் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
Q ➤ சிறியவர்களின் தூதர்கள் பரலோகத்தில் யாரை தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள்?
Q ➤ கெட்டுப் போனதை ரட்சிக்க வந்தவர் யார்?
Q ➤ நூறு ஆடுகள் இருந்த ஒருவன். ஒன்று சிதறிப்போனால் என்ன செய்வான்?
Q ➤ காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கப் போகிறவன் பிற ஆடுகளை எங்கே விட்டுப் போவான்?
Q ➤ காணாமற் போனவற்றை கண்டுபிடித்தால் மேய்ப்பன் என்னசெய்வான்?
Q ➤ சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது யாருடைய சித்தமல்ல?
Q ➤ சகோதரன் நமக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால் அவனிடத்தில் போய் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ குற்றஞ்செய்த சகோதரனிடம் எப்பொழுது குற்றத்தை உணர்த்த வேண்டும்?
Q ➤ நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்?
Q ➤ குற்றஞ்செய்தவன் சாட்சிகளினாலும் திருந்தாவிட்டால் அவ்வழக்கை எங்கே கொண்டு செல்லவேண்டும்?
Q ➤ சபைக்கு ஒருவன் செவிகொடாமற்போனால் அவன் யாரைப்போல் காணப்படவேண்டும்?
Q ➤ தாங்கள் வேண்டிக்கொள்கிற காரியத்தை எப்படிக் கேட்கிறவர்கள் பிதாவினால் பெற்றுக்கொள்வார்கள்?
Q ➤ இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே... .என்றார்?
Q ➤ தனக்கு விரோதமாய் குற்றஞ்செய்கிற சகோதரனுக்கு எத்தனைதரம் மட்டும் மன்னிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?
Q ➤ பேதுரு, இயேசுவினிடத்தில் வந்து தன் சகோதரனை எத்தனைதரம் மன்னிக்க வேண்டும் என்று கேட்டான்?
Q ➤ இயேசு பேதுருவிடம் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று கூறினார்?
Q ➤ தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது எது?
Q ➤ ராஜாவுக்கு முன்பதாக எத்தனை தாலந்து கடன்பட்டவனை கொண்டு வந்தார்கள்?
Q ➤ கடன்பட்டவன் தன் கடனைத் தீர்க்க அவனுக்கு இல்லாதிருந்தது எது?
Q ➤ தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று கடனைத் தீர்க்கும்படி கட்டளையிடப்பட்டவன் யார்?
Q ➤ பதினாயிரம் கடன்பட்டவனை மன்னித்து விடுதலைப் பண்ணியவன் யார்?
Q ➤ நூறுவெள்ளிப் பணம் கடன்பட்டவனுடையத் தொண்டையை நெரித்தவன் யார்?
Q ➤ நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டவன் தன்னிடத்தில் யார் பொறுமையாயிருக்க வேண்டுமென்று கெஞ்சினான்?
Q ➤ நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டவனை காவலில் தள்ளியவன் யார்?
Q ➤ நான் உனக்கு இரங்கினது போல நீயும் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ என்று ராஜாவால் அறிவுறுத்தப்பட்டவன் யார்?
Q ➤ ஆண்டவன் கோபமடைந்து யாரை உபாதிக்கிறவர்களிடம் ஒப்புக்கொடுத்தான்?
Q ➤ அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ சகோதரன் தப்பிதங்களை மன்னியாதவர்களை மன்னியாதவர் யார்?